உள்ளூர் செய்திகள்
மணமக்கள் கே.தரணி-டாக்டர் எஸ்.துளசி அய்யா ஆகியோரை அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வாழ்த்தினார்.

திருவாரூர் மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் எஸ்.காமராஜ்-விஜயலட்சுமி காமராஜ் ஆகியோரின் இல்ல திருமண விழா

Published On 2022-02-06 15:21 IST   |   Update On 2022-02-06 15:21:00 IST
திருவாரூர் மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் எஸ்.காமராஜ் - விஜயலட்சுமி காமராஜ் ஆகியோரின் இல்ல திருமண விழாவில், பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
தஞ்சாவூர்:

திருவாரூர் மாவட்ட அ.ம.மு.க செயலாளரும் மன்னார்குடி தரணி குழுமங்களின் தலைவருமான எஸ்.காமராஜ்- மன்னார்குடி தரணி குழுமம் மேலாண் இயக்குனர் விஜயலட்சுமிகாமராஜ் தம்பதியரின் மகள் டாக்டர் கே.தரணிக்கும், தஞ்சை மாவட்டம் ஒக்கநாடு கீழையூர் மேலத்தெருவை சேர்ந்த சாம்பமூர்த்தி சேந்தமுடையார்- ராஜேஸ்வரி தம்பதியின் மகன் டாக்டர் எஸ்.துளசி அய்யாவுக்கும் பெரியோர்களால் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மஹாராஜா மஹாலில்  நடைபெற்றது.
 
இந்தத் திருமணத்தை அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமை தாங்கி நடத்தி வைத்து மணமக்களை ஆசிர்வதித்து வாழ்த்தினார்.

இதில் அ.ம.மு.க மாநில, மாவட்ட நிர்வாகிகள், அனைத்துக் கட்சி நிர்வாகிகள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

திருமண விழாவில் நாதஸ்வர இசை செல்வம் கலைசக்கரவர்த்தி எடஅன்னவாசல் டாக்டர் மணிசங்கரின் மங்கல லயநாதம், சிறப்பு தவில் தேசிய விருது பெற்ற அமிர்தவர்ஷினி ஆகியோரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் செண்டை மேளமும் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை மணமகளின் பெற்றோர் எஸ்.-காமராஜ், விஜயலட்சுமி காமராஜ் மற்றும் மணமகளின் சகோதர-சகோதரிகளான கே.ஜெயப்பிரியா, 
கே.ஜெயேந்திரன், தரணி குழுமம் ஊழியர்கள், எடஅன்ன வாசல் ரவி ராஜாளியார் மிராசு, வாசுகிரவி, அசோகன், சாரதாஅசோகன், 
பூமயில்மாரியப்பன், மணியம்மாள் சாமிக்கண்ணு மற்றும் மணமகன் பெற்றோர் சாம்பமூர்த்தி, ராஜேஸ்வரி மற்றும் உறவினர்கள் செய்திருந்தனர்.

Similar News