உள்ளூர் செய்திகள்
வியாபாரி வீட்டில் 11 பவுன் நகை திருட்டு
மதுரையில் பொரிகடலை வியாபாரி வீட்டில் 11 பவுன் நகை திருட்டு போனது. இது குறித்து பக்கத்து வீட்டு பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
மதுரை
மதுரை சொக்கலிங்கம் நகரைச் சேர்ந்தவர் சண்முக சுந்தரம். பொரிகடலை கடை வியாபாரி. இவரது மனைவி முருகேஸ்வரி(வயது 42). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்றார்.
அப்போது யாரோ மர்ம நபர் பூட்டைத் திறந்து வீட்டுக்குள் புகுந்துள்ளனர். அவர்கள் பீரோவில் இருந்த நகை, பணத்தை திருடிச் சென்றுள்ளனர். வீடு திரும்பிய முருகேஸ்வரி கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்ததை பார்த்த அவர் கொள்ளை சம்பவம் ந¬பெற்றுள்ளது என அறிந்து கொண்டார்.
இது குறித்து எஸ்.எஸ்.காலனி குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் அவர் புகார் கொடுத்தார். அதில், 11 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். சந்தேகத்தின்பேரில் முருகேஸ்வரி பக்கத்து வீட்டில் வசிக்கும் கர்ப்பிணிப் பெண் ஒருவரிடம் அவர் விசாரணை நடத்தினார்.