உள்ளூர் செய்திகள்
ஒன்றிய அரசை கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
ஒரத்தநாட்டில் ஒன்றிய அரசை கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாட்டில் திராவிடர் கழகம் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்ட செயலாளர் அருணகிரி தலைமை தாங்கினார்.
ஒரத்தநாடு ஒன்றிய அமைப்பாளர் நல்பரமசிவம், திருவோணம் ஒன்றிய தலைவர் சார்மி, அரசு இளங்கோ, திருவோணம் ஒன்றிய செயலாளர் சில்லத்தூர் சிற்றரசு, நகர தலைவர் பேபி ரவிச்சந்திரன், நகர இளைஞரணி செயலாளர் பேபிரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் பேரூர் செயலாளர் ஷேக்தாவூத், ம.தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் சுப்பையன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சீனி முருகையன், விடுதலை சிறுத்தை ஒன்றிய செயலாளர் பார்த்திபன், திராவிடர் கழக தலைமை கழக பேச்சாளர் சிற்றரசு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மணிவண்ணன், திருவோணம் ஒன்றிய ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராதாமணாளன், விடுதலை சிறுத்தை ஒன்றிய செயலாளர் சிவாஜி, ஒன்றிய மகளிர் அணி தலைவர் வடசேரி அல்லிராணி, மதிமுக நகர செயலாளர் ஜாலின், மதிமுக பொறுப்பாளர் அர்ஜுனன், சிபிஐ பொறுப்பாளர் திருநாவுக்கரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உத்திராபதி, ஒன்றிய துணைச் செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய துணைச் செயலாளர் பிரபு.
கிழக்கு பகுதி செயலாளர் துரைதன்மானம், விசிக ஒன்றிய துணைச் செயலாளர் கார்த்திக், மார்க்சிஸ்ட் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி சங்கர், விசிக பொறுப்பாளர்கள் மகேஷ், பாலமுருகன், மாவட்ட தி.க. இணை செயலாளர் ஞானசிகாமணி, மாவட்ட தி.க. துணைத் தலைவர் முத்து ராஜேந்திரன். பெரியார் வீர விளையாட்டுக் கழக மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், உத்திராபதி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.