உள்ளூர் செய்திகள்
படவேடு ரேணுகாம்பாள் கோவில் கும்பாபிஷேகம்
படவேடு ரேணுகாம்பாள் கோவில் கும்பாபிஷேகத்தில் டிரோன் மூலம் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேட்டில் ரேணுகாம்பாள் கோவில் உள்ளது. கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை நடந்தது.
விழாவை முன்னிட்டு கடந்த 2-ந்தேதி தொடங்கி இன்று காலை வரை 6 காலயாக பூஜைகள் செய்யப்பட்டது. இன்று கும்பாபிஷேகத்தை யொட்டி அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது.
அதைத் தொடர்ந்து காலை 8.15 மணியளவில் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடந்தது. அங்கு திரண்டிருந்த பக்தர்கள் அப்போது சாமியை வணங்கி தரிசித்தனர்.
படவேடு கோவில் தர்மேஸ்வர சிவாச்சாரியார், ஞானஸ்கந்த சிவாச்சாரியார், கணேச சிவாச்சாரியார் மற்றும் குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
அங்கு குவிந்திருந்த பக்தர்கள் மீது டிரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் சுமார் 3000 பக்தர்கள் மாடவீதிகளில் காத்திருந்தது சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் துணை சபாநாயகர் பிச்சாண்டி, அண்ணாதுரை எம்.பி., கலசப்பாக்கம் சரவணன் எம். எல். ஏ., டாக்டர் கம்பன், போளூர் ஒன்றியகுழு¢ தலைவர் சாந்திபெருமாள், திருவண்ணாமலை இணை ஆணையர் கஜேந்திரன், உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, படவேடு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் உள்பட பக்தர்கள் பங்கேற்றனர்.
முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ஆர்.வி. சேகர், கோவில் துணை ஆணையர் ராமு (செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பு), மேலாளர் மகாதேவன் மற்றும் பணியாளர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.