உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நெல்லையில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு

Published On 2022-02-06 14:47 IST   |   Update On 2022-02-06 14:47:00 IST
நெல்லையில் கடந்த மாத தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு 800-ஐ தொட்ட நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.
நெல்லை:

கொரோனா 3-வது அலை காரணமாக நெல்லை மாவட் டத்தில் கடந்த மாத தொடக்கத்தில் இருந்து தினசரி பாதிப்பு நாள்தோறும் உயரத்தொடங்கியது.

தினசரி பாதிப்பு 800-ஐ தாண்டிய நிலையில் தடுப்பு நடவடிக் கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.இதன் பயனாக கடந்த 2 வாரங்களாக தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது.

நேற்று மாவட்டம் முழுவதும் 108 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு 65 ஆக குறைந்துள்ளது.

இதில் மாநகர பகுதியில் மட்டும் 24 பேர் அடங்குவர். நாங்குநேரி, களக்காடு, பாளையங் கோட்டை, வள்ளியூர், ராதாபுரம் பகுதிகளிலும் பாதிப்பு குறைந்து வருவது சுகாதாரத்துறையினருக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.

Similar News