உள்ளூர் செய்திகள்
ந்திரன் சிலைக்கு பூஜை செய்யப்பட்டதையும், பக்தர்கள் தரிசனம் செய்ததையும் படத்தில் காணலாம்.

நெல்லையப்பர் கோவிலில் சந்திரன் சிலைக்கு கும்பாபிஷேகம்

Published On 2022-02-06 14:39 IST   |   Update On 2022-02-06 14:39:00 IST
நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் நவக்கிரக சன்னதியில் உள்ள சந்திரன் சிலையின் கையில் சேதம் அடைந்த மலர் மொட்டு சீரமைக்கப்பட்டு உள்ளது. இதனையொட்டி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நெல்லை:

நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் நவக்கிரக சன்னதியில் உள்ள சந்திரன் சிலை உள்ளது.

அந்த சிலையின் கையில் உள்ள மலர் மொட்டு சேதம் அடைந்திருந்தது. இதனால் அந்த சிலையை சீரமைக்க பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து புதிதாக செம்பினால் செய்யப்பட்ட மலர் மொட்டு செய்யப்பட்டு சிலையின் கையில் பொருத்தப்பட்டது.

இதையடுத்து கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.  இதனை முன்னிட்டு நேற்று மாலை விநாயகர் அனுக்ஞை ஆரம்பமானது.  

அதன் பின்னர் கும்ப பூஜை, பாலாலயம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை  நடைபெற்றது.

இன்று காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் லகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது விநாயகர் பூஜை, கணபதிஹோமம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Similar News