உள்ளூர் செய்திகள்
கோவிந்தராஜ் துப்பாக்கியு-டன் இருக்கும் காட்சி.

துப்பாக்கியுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியவர் மீது வழக்கு பதிவு

Published On 2022-02-06 14:19 IST   |   Update On 2022-02-06 14:19:00 IST
அந்தியூர் போலீஸ் நிலையம் முன்பு துப்பாக்கியுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர்:

அந்தியூர் போலீஸ் நிலையம் முன்பு துப்பாக்கியுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தவிட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (50). இவர் கடந்த 2&ந் தேதி அந்தியூர் போலீஸ் நிலையம் முன்பு  துப்பாக்கியுடன் நின்று எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தற்போது தேர்தல் சமயம் என்பதால் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருக்கும் நபர்கள் தங்களது துப்பாக்கியை போலீஸ் நிலையத்தில் ஒப்படைப்பார்கள்.
 
அவ்வாறு துப்பாக்கி உரிமம் பெற்ற அந்தியூரை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் தனது டபுள் பேரல் துப்பாக்கியை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வந்துள்ளார். 

அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்த கோவிந்தராஜ் அந்த துப்பாக்கியை வாங்கி புகைப்படம் எடுத்தது தெரியவந்தது.

இதனையடுத்து 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News