உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

கொரோனா பாதிப்பிலிருந்து 1.22 லட்சம் பேர் குணமடைந்தனர்

Published On 2022-02-06 14:09 IST   |   Update On 2022-02-06 14:09:00 IST
ஈரோட்டில் தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பிலிருந்து 1.22 லட்சம் பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
ஈரோடு:

ஈரோட்டில் தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பிலிருந்து 1.22 லட்சம் பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் 3-ம் அலை காரணமாக கடந்த மாத தொடக்கத்தில் இருந்து தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது.  

இதனை கட்டுப்படுத்த ஈரோடு மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தது.
 
இதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியுள்ளது.  இதேபோல் தொடர்ந்து மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

நேற்று மேற்கொண்ட கொரோனா தினசரி பரிசோதனைகளில் 13.6 சதவீதம் பாதிப்பு குறைந்துள்ளது.

இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 405 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 254 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் பாதிப்பிலிருந்து 883 பேர் குணமடைந் துள்ளனர். இதுவரை குணமடை ந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 371 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்புடன் கோவை மருத்துவ கல்லூரி மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

இதையடுத்து மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 727 ஆக உயர்ந்துள்ளது

தற்போது மாவட்டம் முழுவதும் 7,156 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதில் பெரும்பாலோனோருக்கு லேசான அறிகுறி உள்ளதால் அவர்கள் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News