உள்ளூர் செய்திகள்
வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு மிரட்டல்,கணவன் உள்பட 3 பேர் மீது வழக்கு
சேலம் அருகே வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சேலம்:
சேலம் மல்லமூப்பம்பட்டியை சேர்ந்தவர் சுமையா கவுசிர் (வயது 30). இவருக்கும், திருப்பத்தூர் மாவட்டம் முத்தாலிபாளையம் பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் மகன் ரியாசுதீனுக்கும் (32) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்தநிலையில் சுமையா கவுசிரிடம், கணவன் மற்றும் அவருடைய பெற்றோர் அப்துல் ரகுமான், மும்தாஜ் ஆகியோர் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் வரதட்சணையாக தரவேண்டும் என்று கேட்டு மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சுமையா கவுசிர் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ரியாசுதீன், அப்துல் ரகுமான், மும்தாஜ் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.