உள்ளூர் செய்திகள்
தேர்தல் களத்தில் 4540 வேட்பாளர்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 4540 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.
நாகர்கோவில்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சி யில் உள்ள 52 வார்டுகளிலும் போட்டியிட 384 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
குளச்சல் நகராட்சியில் 83 பேரும் பத்மநாபபுரம் நகராட்சியில் 115 பேரும், குழித்துறை நகராட்சி 86 பேரும், கொல்லங்கோடு நகராட்சியில் 176 பேரும், 51 பேரூராட்சிகளிலும் 3 ஆயிரத்து 737 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது. நாகர்கோவில் மாநகராட்சியில் 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் நாகர்கோவில் நகராட்சி 52 வது வார்டு திமுக சார்பில் மனு தாக்கல் செய்திருந்த லிவிங்ஸ்டன் மனுவும் தள்ளுபடியானது.
நாகர்கோவில் மாநகராட்சியில் 12-வது வார்டில் அ.ம.மு.க. சார்பில் மனுத் தாக்கல் செய்திருந்த கொமண்டை, 36 வது வார்டில் மனு தாக்கல் செய்திருந்த சிவகுமார் ஆகியோரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
தற்போது மாநகராட்சி உள்ள தேர்தல் களத்தில் 376 வேட்பாளர்கள் உள்ளனர். குளச்சல் நகராட்சியில் ஒருவரது வேட்புமனுவும், பத்மநாபபுரம் நகராட்சியில் மூன்று வேட்பாளர்ளின் மனுவும், குழித்துறையில் ஒரு வேட்பாளரின் மனுவும் தள்ளுபடி ஆனது.
தற்போது குளச்சல் நகராட்சியில் 82 வேட்பாளர்களும், பத்மநாபபுரம் நகராட்சியில், 112 வேட்பாளர்களும், குழித்துறை நகராட்சியில் 85 வேட் பாளர்களும், கொல்லங்கோடு நகராட்சியில் 176 வேட்பாளர்களும் தேர்தல் களத்தில் உள்ளனர்.
51 பேரூராட்சிகளிலும் 28 வேட்பு மனுக்கள் தள்ளுபடி ஆனது. இதையடுத்து தற்போது 3709 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். மாவட்டம் முழுவதும் நேற்று நடந்த வேட்புமனு பரிசீலனையின் போது 41 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
தற்பொழுது 4540 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். வேட்பு மனுக்களை வாபஸ் பெற நாளை 7-ந் தேதி கடைசி நாள் ஆகும். நாளை மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதைத்தொடர்ந்து அங்கீகரிக் கப்பட்ட கட்சிகளுக்கு அந்தந்த சின்னங்களும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.