உள்ளூர் செய்திகள்
அரசு ஆஸ்பத்திரியில் தேங்கி கிடக்கும் கழிவுநீர்
கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்தநிலையில் மருத்துவமனை வளாகத்தில் கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அங்கு வரும் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் கழிவுநீரால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
எனவே கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.