உள்ளூர் செய்திகள்
என்ஜினீயரிங் பட்டதாரி திடீர் சாவு
புத்தளம் அருகே என்ஜினீயரிங் பட்டதாரி திடீரென மரணம் அடைந்தார்.
கன்னியாகுமரி:
புத்தளம் அருகே உள்ள தெற்குதேரிவிளையை சேர்ந்தவர் ஜெகதீஷ் குமார் (வயது 30). இவர் பி.இ.படித்துவிட்டு வேலைக்கு காத்திருந்ததாகவும், நேற்று காலையில் வீட்டில் டிபன் சாப்பிட்டு விட்டு டிவி பார்த்துக் கொண்டு இருந்ததாகவும், திடீரென அவருக்கு தலை சுற்றுவதாக அவருடைய அம்மா சந்திரலேகாவிடம் தெரிவித்துள்ளார்.
உடனே சந்திரலேகாவும் அவரது மூத்த மகன் மகேசும் சேர்ந்து ஈத்தாமொழி அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்றுக்கொண்டு மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஜெகதீஷ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது அம்மா சந்திரலேகா சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஆஷாஜெபகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.