உள்ளூர் செய்திகள்
பேராவூரணி அருகே கால்நடை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த முதுகாடு கிராமத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புதுறை சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கவுரிசரவணமுத்து தலைமை வகித்தார்.
கால்நடை மருத்துவர்கள் மலையப்பன், வீரமணி, ஜோபன்ராஜ், உதவியாளர்கள் சுந்தரம், செல்வம் உள்ளிட்டோர் கால்நடைகளை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.
முகாமில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்தல், ஆண்மை நீக்கம் செய்தல், செயற்கை முறை கருவூட்டல் செய்தல், மலடு நீக்க சிகிச்சை செய்தல், சினைப் பரிசோதனை செய்தல், சிறு அறுவை சிகிச்சைகள், தாது உப்பு கலவை வழங்குதல், சிறுகண்காட்சி ஆகியவை நடைபெற்றன.
முகாமில் கன்றுகள் பேரணி நடைபெற்றது. கலந்துகொண்ட கன்றுகளில் சிறந்த கிடேரி கன்றுகளைத் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. கால்நடை வளர்ப்பில் சிறந்த பராமரிப்பு மேலாண்மைகான விருது வழங்கப்பட்டது.