உள்ளூர் செய்திகள்
திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற மணப்பெண் படுகாயம்
மயிலாடி அருகே திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற மணப்பெண் படுகாயம் அடைந்தார்.
நாகர்கோவில்:
மயிலாடி புதூரை சேர்ந்தவர் நாராயண பெருமாள். இவரது மனைவி வேலம்மாள் (வயது 72). இவர் நேற்று பொருள்கள் வாங்க கடைக்கு சென்றார்.
பின்னர் வீட்டிற்கு செல்ல நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக ஒரு பெண் மொபட்டில் வந்தார். திடீரென மொபட், நடந்து சென்ற மூதாட்டி வேலம்மாள் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.
இதுபோல மொபட்டை ஓட்டி வந்த இளம்பெண்ணும் படுகாயம் அடைந்தார். காயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதில் காயமடைந்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. அவர் திருமண அழைப்பிதழ் கொடுக்க மொபட்டில் வந்த போது விபத்தில் சிக்கியது தெரியவந்தது.
விபத்து தொடர்பாக அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.