உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சி தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த கோரிக்கை

Published On 2022-02-06 12:21 IST   |   Update On 2022-02-06 12:21:00 IST
மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சி தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த கோரிக்கை

கரூர்:

மக்களவை,  சட்டப்பேரவை, உள்ளாட்சி தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தவேண்டும் என தமிழ் நாடு விவசாயிகள்  சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் செ.நல்லசாமி தெரிவித்தார்.
 
கரூரில்  நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் பார்களை 6 மாதங்களுக்குள் மூடக் கூறியிருப்பதை வரவேற்கிறோம். தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன், கல்வியை மாநில அதிகார பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என கூயிருக்கிறார்.

ஊராட்சி ஒன்றியங்களின் அதிகாரத்தில் இருந்த கல்வி, சுகாதாரம், கால்நடை மேம்பாடு, விவசாயம் ஆகியவற்றை பறித்து கொண்டு தற்போது கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர கேட்கின்றனர்.
 
அதுபோல மேற்கண்டவற்றை ஊராட்சி ஒன்றியங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும். கடந்த 2 ஆண்டுகளில் சர்க்கரை உற்பத்தி அதிகரித்துள்ளதால் மானியம் கொடுத்து சர்க்கரையை ஏற்றுமதி செய்து வருகின்றனர். அமெரிக்கா, பிரேசில் போல சர்க்கரை ஆலைகளை எத்தனால் ஆலைகளாக மாற்ற வேண்டும்.

பெட்ரோலுடன் 85 சதவீத எத்தனாலை கலந்து பயன்படுத்தினால், பெட்ரோல் இறக்குமதிக்காக செலவிடப்படும்  ரூ.16 லட்சம் அந்நிய செலாவணியை மிச்சப்படுத்தலாம்.

மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல்களில் நோட்டா இடம் பெறும் போது,  உள்ளாட்சி தேர்தலில் ஏன் நோட்டா இடம்பெறவில்லை. மொடக் குறிச்சியில் கடந்த 1996-ம் ஆண்டு ஆயிரத்திற்கு மேற்பட்டோரை போட்டியிட வைத்து போராடி பெற்ற உரிமைதான் நோட்டா.

தமிழக தேர்தல் ஆணையத்தின் மீது எங்களுக்கு நம் பிக்கையில்லை. எனவே, மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சித்  தேர்தல்களை ஒரே  நேரத்தில்  நடத்த வேண்டும். இதன் மூலம் நேரம், பொருளாதாரம் மிச்சமாகும். முதல்வர் மு.க.ஸ்டா லின் கள்ளுக்கான தடையை நீக்கவேண்டும். உள்ளாட்சிகளில்  கட்சி சார்பின்றி போட்டியிட வகை செய்ய வேண்டும். இதன் மூலம் அரசியலை தாண்டிய நல்லவர்களுக்கு பொறுப்புக்கு வருவார்கள் என்றார்.

Similar News