உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள பறக்கும் படை

Published On 2022-02-06 06:07 GMT   |   Update On 2022-02-06 06:07 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் பறக்கும் படையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
புதுக்கோட்டை :

புதுக்கோட்டை  மாவட்டத்தில்   நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத்தேர்தல்களில் மாதிரி நடத்தை விதிகள் கடைபிடிக்கப்படுவதை 24 மணி நேரமும் கண்காணித்திடும் பொருட்டு ஒவ்வொரு நகர்ப்புற  உள்ளாட்சி  அமைப்பிலும்  பறக்கும் படையினர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பறக்கும் படையிரின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்திட மாவட்ட அளவில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியினர் நலத்துறை  அலுவலர் கண்காணிப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பறக்கும் படையினரால் வாகனத்தணிக்கையின் போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும்  ரொக்கம்  மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு தொடர்புடைய கருவூல அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்படும். பறக்கும் படையினரால்  பறிமுதல் செய்யப்படும் பொருட்கள் மற்றும் ரொக்கம் குறித்த விபரங்களுக்கு பறக்கும் படை  தலைமை  அலுவலரால் தொடர்புடைய நபருக்கு உரிய அத்தாட்சி கடிதம் வழங்கப்படும்.

இந்த அத்தாட்சி கடித நகலுடன்  பறிமுதல்  செய் யப்பட்ட  தொகை  மற்றும் பொருட்களை மீளப்பெற தொடர்புடைய   நபர்கள் விண்ணப்பத்திடலாம். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர், மாவட்ட கருவூல அலுவலர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர்  மற்றும்  பழங்குடியினர்  நல  அலுவலர்  ஆகியோரை  உள்ளடக்கிய  ஒரு மேல்  முறையீட்டு  குழு இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து கைப்பற்றப்பட்ட பொருட்களை மீள வழங்குதல் குறித்து முடிவு கள் மேற்கொள்ளும்.

இந்த மேல்முறையீட்டுக் குழுவின் குழுக்கூட்டுபவராக மாவட்ட   ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செயல்படுவார். அவரது அலைபேசி எண் 94420 56878 ஆகும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News