உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

கோழிகளை திருடும் கும்பல்- பண்ணையாளர்களுக்கு எச்சரிக்கை

Published On 2022-02-06 10:54 IST   |   Update On 2022-02-06 10:54:00 IST
17 கோழிகளை வேனின் ‘டூல்ஸ் பெட்டி’க்குள் தொழிலாளர்கள் அடைத்து வைத்துள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே கெங்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஒரு விவசாயி கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். கோழியை வளர்த்து உற்பத்தியாளருக்கு கொடுத்து வருகிறார். வளர்ந்த கோழிகளை எடுத்து செல்ல ஒரு வேனில்5 தொழிலாளர் வந்துள்ளனர். 

விவசாயி உடன் இருக்கும்போதே, அவருக்கு தெரியாமல் 17 கோழிகளை வேனின் ‘டூல்ஸ் பெட்டி’க்குள் தொழிலாளர்கள் அடைத்து வைத்துள்ளனர். 

இதை பார்த்த விவசாயி தொழிலாளர்களை கையும், களவுமாக பிடித்து உள்ளார்.’இது வெளியே தெரிந்தால் பிரச்சினை பெரிதாகும்‘ என்பதால் போலீசுக்கு போகாமல் கமுக்கமாக முடிக்கப்பட்டுள்ளது.   

கோழிகள் நூதன முறையில் இதுபோன்று திருடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். 

எனவே பண்ணையாளர்கள் கவனத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Similar News