உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வேலூர் மாநகராட்சி கட்சியில் சீட் கிடைக்காதவர்கள் சுயேட்சையாக போட்டி

Published On 2022-02-05 15:29 IST   |   Update On 2022-02-05 15:29:00 IST
வேலூர் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு கட்சியில் சீட் கிடைக்காதவர்கள் சுயேட்சையாக களத்தில் இறங்கியுள்ளனர்.
வேலூர்:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து கடந்த 28-ந்தேதி மனு தாக்கல் தொடங்கியது. 

மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் அ.தி.மு.க, தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள், தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தனர்.

வேலூர் மாநகராட்சியில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களது கட்சியில் சீட் கேட்டு விண்ணப்பித்தனர். 

விண்ணப்பித்த ஒரு சிலருக்கு கட்சி சார்பில் போட்டியிட சீட் வழங்கவில்லை. இதனால் கட்சியின் மீது அதிருப்தி அடைந்த அ.தி.மு.க, தி.மு.க, தே.மு.தி.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்கள் கட்சி சார்ந்த வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக மனு தாக்கல் செய்தனர். 

தங்களது கட்சியை சேர்ந்தவர்களே தங்களுக்கு எதிராக சுயேட்சையாக போட்டி யிடுவதால் கட்சி அங்கீகாரத்துடன் போட்டி யிடும் வேட்பாளர்கள் ஓட்டுகள் சிதறி தோல்வி அடைந்து விடுவோமோ? என கலக்கத்தில் உள்ளனர்.

வேட்புமனுக்கள் பரிசீலனை மற்றும் வேட்புமனு வாபஸ் இன்று நடைபெறுகிறது. 

அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களுக்கு எதிராக சுயேட்சையாக களம் இறங்கியவர்களை வாபஸ் பெற வேண்டும் என்று வற்புறுத்துவார்கள் என கூறப்படுகிறது.

 இதனால் வேலூர் மாநகராட்சி தேர்தலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Similar News