உள்ளூர் செய்திகள்
பாதாள சாக்கடை கழிவுநீர் வழிந்து ஓடுவதையும், அதன் மீது மாணவர்கள், பொதுமக்கள் நடந்து செல்லும் காட்சி.

பஸ்நிலைய நுழைவுவாயிலில் வழிந்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர்

Published On 2022-02-05 13:19 IST   |   Update On 2022-02-05 13:19:00 IST
மயிலாடுதுறையில் பழைய பஸ்நிலைய நுழைவுவாயிலில் வழிந்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீரால் பொதுமக்கள் அவதியடைந்து உள்ளனர்.
தரங்கம்பாடி:

மயிலாடுதுறை பழைய பஸ்நிலையம் நுழைவுவாயில் உள்ள பாதாள சாக்கடை கழிவு நீர் வழிந்து பஸ் நிலையத்தில் ஓடுகிறது. இதுபற்றி மயிலாடுதுறை நகராட்சி ஆணையருக்கு பொதுமக்கள் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மயிலாடுதுறைக்கு வரும் வெளியூர், வெளி மாவட்டம், உள்ளூர்வாசிகள் வந்து செல்லும் முக்கிய இடமாக பழைய பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது.

அடிக்கடி இதுபோல் பாதாள சாக்கடை கழிவுநீர் நிரம்பி வழிந்து வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. 

மாணவ-மாணவிகள் இதனை கடந்து சென்று வருவதால் அவர்களுக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டு வருவதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

நகர்ப்புற தேர்தல் நடக்க இருப்பதால், வேட்பாளர்கள் எதைச் சொல்லி 
வாக்கு கேட்பது என்று தெரியாமல் திணறி வருகின்றனர். அதிமுக 
ஆட்சியில் மயிலாடுதுறை நகரத்தில் பாதாள சாக்கடையை சரி 
செய்யாமல் கிடப்பில் போட்டப்பட்டது.

தற்போது தி.மு.க. ஆட்சியில் போதுமான நிதி உடனே வழங்க இயலாததாலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வந்துவிட்ட நிலையில் தி.மு.க.வினரும் செய்வதறியாது உள்ளனர். 

இதனை அவசர வேலையாக கருதி நகராட்சி நிர்வாகத்தினர் இதனை 
உடனே சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News