உள்ளூர் செய்திகள்
பணம்

வேட்பாளர்கள் மூலம் ரூ.60 லட்சம் வரி நிலுவை தொகை வசூல்

Published On 2022-02-04 09:30 GMT   |   Update On 2022-02-04 09:30 GMT
ஈரோடு மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் மாநகராட்சியில் செலுத்த வேண்டிய நிலுவை வரியை கடந்த சில நாட்களாக செலுத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக 4 மண்டல அலுவலகங்கள், மாநகராட்சி மைய அலுவலகம், வீரப்பன்சத்திரம் அலுவலகம் என 6 இடங்களில் கடந்த 29-ந் தேதி முதல் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போது தங்களுடைய சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரி இனங்கள் 100 சதவீதம் செலுத்தி வரி நிலுவை இல்லா சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்றும், அதனை வேட்புமனு தாக்கலின்போது கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதனை அடுத்து மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் மாநகராட்சியில் செலுத்த வேண்டிய நிலுவை வரியை கடந்த சில நாட்களாக செலுத்தி வருகின்றனர். இதன்படி கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி முதல் கடந்த 2-ந் தேதி வரை 5 நாட்களில் மட்டும் ரூ.58 லட்சத்து 96 ஆயிரம் நிலுவை வரி செலுத்த பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News