உள்ளூர் செய்திகள்
வழக்கு பதிவு

பா.ஜனதா எம்.எல்.ஏ. காரில் கட்சிக்கொடி கட்டியதாக டிரைவர் மீது வழக்கு

Published On 2022-02-04 09:23 GMT   |   Update On 2022-02-04 09:23 GMT
நெல்லையில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பா.ஜனதா எம்.எல்.ஏ. காந்தியின் கார் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நெல்லை:

நாகர்கோவிலைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ காந்தி ஒரு நிகழ்ச்சிக்காக நெல்லை கே.டி.சி. நகருக்கு நேற்று காரில் வந்தார்.

அப்போது அவரது காரில் பாரதிய ஜனதா கட்சியின் கொடி கட்டப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் விதிமுறையின் படி தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறவில்லை.

எனவே பறக்கும் படை தேர்தல் அதிகாரியான கோயில் மணி கார் டிரைவரிடம் கொடி கட்டியதற்கான அனுமதியை கேட்டார். அப்போது அனுமதி இல்லாததால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இது குறித்து கோயில்மணி பாளை போலீசில் புகார் செய்தார். போலீசார் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பா.ஜனதா எம்.எல்.ஏ. காந்தியின் கார் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதுபோல கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே சாலையோரம் தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் ஏராளமாக தி.மு.க. கொடி கட்டப்பட்டிருந்தது. இதுகுறித்தும் பறக்கும் படை அதிகாரி கோயில் மணி, பாளை போலீசில் புகார் செய்தார்.

இதைத் தொடர்ந்து தி.மு.க. கொடி நட்டவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News