உள்ளூர் செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில் நாளை 496 மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் நாளை 496 மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதில் 1.50 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நாளை 496 மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதில் 1.50 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
மக்களிடம் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டத்திலும் மாபெரும் தடுப்பூசி முகாம் மூலம் பல லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டு ள்ளனர். இந்நிலையில் நாளை (சனிக்கிழமை) 21-வது கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், பள்ளிகள் என 496 மையங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
நாளை மட்டும் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 1,988 பணி யாளர்கள், 66 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. 18 வயது நிரம்பிய இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கும் நாளை தடுப்பூசி போடப்படுகிறது. மேலும் 60 வயது உடைய இணை நோயுடைய முதியவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது.