உள்ளூர் செய்திகள்
பால் சொசைட்டி உறுப்பினர்கள் முற்றுகை போராட்டம்
நிலுவைத்தொகை வழங்காததை கண்டித்து பால் சொசைட்டி உறுப்பினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
சித்தோடு:
நிலுவைத்தொகை வழங்காததை கண்டித்து பால் சொசைட்டி உறுப்பினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
ஈரோடு ஊராட்சி ஒன்றியம் எலவமலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட மூலப் பாளையம் கிராமத்தில் மூலப்பாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது.
இந்த சங்கத்தில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 300 பேர் உறுப்பின ராக இருந்து கொண்டு காலை மற்றும் மாலை 2 வேளையும் பால் ஊற்றி வருகின்றனர்.
அதேபோல் இந்த கூட்டுறவு சங்கத்தில் ஊற்றப்படும் பாலுக்கு உண்டான பணம் வாரம் ஒருமுறை கூட்டுறவு சங்கத்தால் கொடுக்கப்பட்டு வந்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31&ந் தேதி பால் நிலவை தொகை கொடுக்கப் பட்ட நிலையில் கடந்த ஒரு மாதமாக ரூ.5 லட்சத்து 18 ஆயிரத்து 948 பால் ஊற்றிய உறுப்பினர்களுக்கு நிலுவைத் தொகை கொடுக்கப்படாமல் கால தாமதம் செய்துள்ளதாக தெரிகிறது.
இதனைத்தொடர்ந்து இன்று காலை மூலப்பா ளையம் பால் சொசைட்டி முன்பு பால் ஊற்றும் உறுப்பினர்கள், விவசாயிகள் என பலர் முற்றுகையிட்டு நிலுவைப்பணம் கொடுக்க வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து தகவலறிந்து சித்தோடு இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார் மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு பால் நிலுவைப் பணம் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து உறுப்பி னர்கள் கூறுகையில், தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய 2 பேருக்கும் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக காசோலையில் கையெழுத்து போடாமலும், வங்கியிலிருந்து பணம் எடுக்காமலும் காலதாமதம் செய்து வருகின்றனர்.
ஆகையால் நாங்கள் முற்றுகை போராட்டம் நடத்தினோம் என தெரிவித்தனர்.