உள்ளூர் செய்திகள்
வனப்பகுதியில் கூட்டமாக ரோட்டை கடந்து செல்லும் யானைகள்
சத்தியமங்கலம் வனப்பகுதியில் கூட்டமாக யானைகள் ரோட்டை கடந்து செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
தாளவாடி:
சத்தியமங்கலம் வனப்பகுதியில் கூட்டமாக யானைகள் ரோட்டை கடந்து செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான் உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த வனச்சாலை வழியாக தண்ணீர் மற்றும் உணவு தேடி வன விலங்குகள் அடிக்கடி ரோட்டை கடந்து சென்று வருகிறது.
இந்த நிலையில் தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதி தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் ரோட்டில் சிக்கள்ளி அருகே யானைகள் கூட்டமாக வனச் சாலையை கடந்து சென்றது.
இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை சிறிது தூரத்துக்கு முன்பாக நிறுத்தி கொண்டனர்.
யானைகள் வனப் பகுதிக்கு சென்ற பின் வாகனஓட்டிகள் சென்றனர். வன விலங்குகள் உணவு தண்ணீருக்காக சாலையை கடந்து செல்கிறது.
எனவே வாகன ஓட்டிகள் எச்சரிக் கையுடன் செல்லுமாறு வன விலங்குகளை தொந்தரவு செய்யாமல் செல்ல வேண் டும் என வனத்துறை அறி வுறுத்தி வருகின்றனர்.