உள்ளூர் செய்திகள்
காங்கிரஸ்

சென்னை மாநகராட்சி தேர்தல்- 7 காங்கிரஸ் மாவட்ட தலைவர்களில் 5 பேர் போட்டி

Published On 2022-02-04 06:20 GMT   |   Update On 2022-02-04 06:20 GMT
வடசென்னை கிழக்கு, தென்சென்னை மேற்கு மாவட்டங்களுக்கு தலா 3 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த மாவட்டங்களில் 2 வார்டுகள் இதர நிர்வாகிகளுக்கு கிடைத்துள்ளது.
சென்னை:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் காங்கிரசுக்கு 16 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சென்னையை பொறுத்தவரை காங்கிரசுக்கு 7 மாவட்ட தலைவர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் தேர்தலை சந்திக்க வார்டுகள் பெற்றுள்ளனர்.

இவர்களில் 5 பேர் தேர்தலில் குதித்துள்ளனர். வேட்பாளர்களாக களம் இறங்கி இருக்கும் மாவட்ட தலைவர்களும் அவர்கள் போட்டியிடும் வார்டுகளும் வருமாறு:-

வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் (வார்டு எண்.6), வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் டில்லி பாபு (வார்டு எண்.37), மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சிவராஜ சேகரன் (வார்டு எண்.63), தென் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.ஏ. முத்தழகன் (வார்டு எண்.170), தென்சென்னை மேற்கு மாவட்ட தலைவர் நாஞ்சில் பிரசாத் (வார்டு எண்.165),

தென் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் துரை. இவரது வார்டு (173) பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் மகள் டி.சுபாஷினியை களம் இறக்கி இருக்கிறார். (வார்டு 126).

பெரும்பாலும் ஒரு மாவட்டத்துக்கு 2 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் மாவட்ட தலைவர்கள் ஒரு வார்டை எடுத்துக்கொண்டனர். மீதம் உள்ள ஒரு வார்டு மற்ற நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது

வடசென்னை கிழக்கு, தென்சென்னை மேற்கு மாவட்டங்களுக்கு தலா 3 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே அந்த மாவட்டங்களில் 2 வார்டுகள் இதர நிர்வாகிகளுக்கு கிடைத்துள்ளது.


Tags:    

Similar News