search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திமுக
    X
    திமுக

    சென்னை மாநகராட்சியில் 165 வார்டுகளில் தி.மு.க. போட்டி- டாக்டர்கள், என்ஜினீயர்கள், வக்கீல்களுக்கு வாய்ப்பு

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை தோற்கடிக்க செய்து 20 ஆண்டுக்கு பிறகு ராயபுரத்தில் தி.மு.க.வை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற அக்கட்சியின் வடசென்னை மாவட்ட பொறுப்பாளரான இளைய அருணாவை இந்த முறை கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க. நிறுத்தி உள்ளது
    சென்னை:

    சென்னை மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் தி.மு.க. 165 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 5 இடங்களும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 3 இடங்களும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 4 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

    மற்ற சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை சேர்த்து மொத்தம் 174 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளன.

    தி.மு.க.வின் இந்த பட்டியலில் 6 வக்கீல்கள், 2 என்ஜீனியர்கள், 3 டாக்டர்கள், 5 எம்.பி.ஏ. பட்டதாரிகள் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இதில் சென்னை மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் நே. சிற்றரசு கடந்த சட்டமன்ற தேர்தலில் இளைஞரணி செயலாளர் உதயநிதியின் வெற்றிக்காக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் தீவிரமாக பணியாற்றினார். அதனால் இந்த முறை சிற்றரசுக்கு மாநகராட்சி பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இதேபோல் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை தோற்கடிக்க செய்து 20 ஆண்டுக்கு பிறகு ராயபுரத்தில் தி.மு.க.வை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற அக்கட்சியின் வடசென்னை மாவட்ட பொறுப்பாளரான இளைய அருணாவை இந்த முறை கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க. நிறுத்தி உள்ளது

    இதேபோல் மதுரவாயல் 150-வது வார்டில் கணபதி எம்.எல்.ஏ.வின் மனைவி ஹேமலதா போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன் பரிதி இளம்சுருதி 99-வது வார்டில் முன்னாள் ஐ.ஏ.ஏஸ். அதிகாரி சிவகாமியை எதிர்த்து களம் காண்கிறார்.

    திரு.வி.க.நகரில் பெரம்பூர் முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகள் ஆர்.பிரியா 74-வது வார்டில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி. சங்கரின் சகோதரர் கே.பி. சொக்கலிங்கத்துக்கு 5-வது வார்டிலும், முன்னாள் ஒன்றிய செயலாளர் புழல் நாராயணனின் மனைவி கவிதா நாராயணன் 17-வது வார்டில் போட்டியிடவும் மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    தி.நகர் கே.ஏழுமலை, பாலவாக்கம் விசுவநாதன், கே.கே.நகர் தனசேகரன், பெருங்குடி ரவிச்சந்திரன், மகேஷ்குமார், ராமலிங்கம், ஏ.ஆர்.பி.எம். காமராஜ், மதன் மோகன் உள்ளிட்ட முன்னாள் கவுன்சிலர்களுக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    கொரோனாவால் உயிரிழந்த முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் ஜெ.அன்பழகனின் மகன் ராஜா அன்பழகனுக்கும் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட இந்த முறை வாய்ப்பு கிடைத்துள்ளது.

    சென்னை மாநகராட்சி தேர்தலில் புதுமுகங்கள் ஏராளமான பேருக்கும் இந்த முறை வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் பெருமையுடன் கூறினார்கள்.



    Next Story
    ×