உள்ளூர் செய்திகள்
திட்டக்குடி அருகே மணல் கடத்தல் - ஓட்டுனர் தப்பி ஓட்டம்
திட்டக்குடி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட ஓட்டுனர் தப்பி ஓடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திட்டக்குடி:
திட்டக்குடி அடுத்த கொரக்கைவாடி பகுதியில் தொடர்ச்சியாக மணல்திட்டு நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ மற்றும் போலீசார் நேற்று அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே பதிவில்லா வாகனத்தில் கொரக்கை வாடி வெள்ளாறு வடகரை பாலம் அருகே அரசு அனுமதியின்றி ஆற்றுமணல் எடுத்துவந்த சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம் கடமலை பகுதியைச் சேர்ந்த உமாமகேஷ்(30). போலீசாரை கண்டதும் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பித்து ஓடிவிட்டார்.
வாகனத்தை பற்றிய ராமநத்தம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற ஓட்டுநர் தேடி வருகின்றனர்.