உள்ளூர் செய்திகள்
போராட்டம்

கடலூரில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு முழு சம்பளம் வழங்க கோரி உள்ளிருப்பு போராட்டம்

Published On 2022-02-02 16:00 IST   |   Update On 2022-02-02 16:00:00 IST
கடலூரில் முழு சம்பளம் வழங்கக்கோரி தனியார் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

கடலூர்:

தனியார் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தலைவர் விமல் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயசீலன், பொருளாளர் பீட்டர் பெர்னாண்டஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 40 ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது அவர் கூறுகையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 19 மாதமாக எங்களுக்கு பாதி சம்பளம் நிர்வாகத்தால் வழங்கப்பட்டது. தற்போது கடந்த சில மாதங்களாக பள்ளிகள் திறக்கப்பட்ட காரணத்தினால் முழு சம்பளம் வழங்கி வந்தனர்.

தற்போது மீண்டும் தொற்று பரவல் ஏற்பட்ட காரணத்தினால் 10 நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் மீண்டும் பாதி சம்பளம் நிர்வாகம் வழங்கியது. இதனை கண்டித்து நாங்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறோம். மேலும் பள்ளி நிர்வாகம் முழு சம்பளம் வழங்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Similar News