உள்ளூர் செய்திகள்
நகர்புற உள்ளாட்சி தேர்தல்- பண்ருட்டி அ.தி.மு.க. பிரமுகர் திடீர் கைது
குற்றத்தடுப்பு நடவடிக்கை காரணமாக பண்ருட்டி அ.தி.மு.க. பிரமுகரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
பண்ருட்டி:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேஷ் உத்தரவின் பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோர் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பண்ருட்டி கொக்குபாளையம் மெயின் ரோடு முத்தையா நகரை சேர்ந்த முனியப்பன் (வயது 44) அ.தி.மு.க. பிரமுகர் என்பவரை கைது செய்தனர்.
இவர் மீது தமிழகம் மற்றும் புதுவை மாநிலத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது. குற்றத்தடுப்பு நடவடிக்கை காரணமாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.