உள்ளூர் செய்திகள்
ஆர்வமுடன் பள்ளிக்கு சென்ற மாணவர்கள்
வேலூர், காட்பாடியில் ஆர்வமுடன் பள்ளிக்கு சென்ற மாணவர்கள்.
வேலூர்:
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் இன்று முதல் தமிழகம் முழுவதும் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மற்றும் கல்லூரிகள் திறக்கலாம் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து வேலூர், காட்பாடி பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர்.
கொரோனா விதிமுறைகள் பின்பற்றி சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்து பள்ளி வகுப்பறைக்கு மாணவர்கள் சென்றனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பர்களை சந்தித்ததால் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்தனர். மேலும் விடுமுறை நாட்களில் நடந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
பள்ளிகள் திறக்கப்பட்டதால் வேலூர் பஸ் நிலையங்களில் மாணவ, மாணவிகளின் கூட்டம் அலைமோதியது. கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன.