உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

தேர்தல் புறக்கணிப்பு பேனரை அதிகாரிகள் அகற்றியதால் பரபரப்பு

Published On 2022-02-01 06:27 GMT   |   Update On 2022-02-01 06:27 GMT
சாலையின் மையப்பகுதியில் மின் கம்பம் நடப்பட்டுள்ளது. கழிவுகள் முறையாக அகற்றுவதில்லை.
காங்கயம்:

திருப்பூர் மாவட்டம் காங்கயம் நகராட்சி பழைய 6-வது வார்டு, புதிய 12-வது வார்டுக்கு உட்பட்டது அய்யாசாமி நகர். இதில் முதல் வீதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. 

இந்த வீதியில் நெடுஞ்சாலை ரோடு இணையும் இடத்திலும், வீதியின் மையப்பகுதியிலும் தனி நபர்கள் பொது வழியை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டியுள்ளனர். இதனால் இந்த வீதியில் தொடங்கப்பட்ட வடிகால் கட்டும் பணி பாதியில் நிற்கிறது. 

மேலும் சாலையின் மையப்பகுதியில் மின் கம்பம் நடப்பட்டுள்ளது. கழிவுகள் முறையாக அகற்றுவதில்லை. இதுபோல் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. 

இதுகுறித்து நகராட்சி கமிஷனருக்கு பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று புகார் தெரிவித்த பொதுமக்கள், தற்போது நடக்க உள்ள வார்டு தேர்தலை புறக்கணிப்பதாக கூறி தெரு முனையில் டிஜிட்டல் பேனர் வைத்தனர். 

இதையடுத்து அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள் அந்த பேனரை அங்கிருந்து எடுத்துச்சென்றனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், 

‘இந்த வீதியில் இருந்த பேனரை அகற்றிய அதிகாரிகளின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இதை விட பெரிய பேனர் நகரில் மேலும் சில இடங்களில் வைக்கப்படும். 

பிரச்சினைக்கு தீர்வு காண்பதை விட்டு ஆக்கிரமிப்புக்கு துணை போகும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை உள்ளது என்றனர்.
Tags:    

Similar News