உள்ளூர் செய்திகள்
முக ஸ்டாலின்

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

Published On 2022-02-01 06:26 GMT   |   Update On 2022-02-01 06:26 GMT
காங்கிரஸ் முன்னாள் எம்.பி. எஸ்.சிங்கார வடிவேல் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

மூத்த காங்கிரஸ் தலைவரான எஸ்.சிங்கார வடிவேல் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தத்துக்கு உள்ளானேன்.

சிங்காரவடிவேல் 4 முறை தஞ்சை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகவும், வழக்கறிஞராகவும் மக்கள் பணியாற்றியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News