உள்ளூர் செய்திகள்
நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவனுக்கு 50 ஆயிரம் பரிசு
அரக்கோணம் அருகே பாரதிதாசனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்ற மாணவரை பாராட்டி ரூபாய் ஐம்பதாயிரத்திற்கான காசோலையை கல்விக் குழுமத்தின் தலைவர் எஸ்.சுந்தர் வழங்கினார்.
அரக்கோணம்:
அரக்கோணம் பாரதிதாசனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2021-2022 ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற டி. அரவிந்த் ரகுநாத், பாரதிதாசனார் நீட் அகாடமியில் பயிற்சி பெற்று தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம் கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.
பாரதிதாசனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்ற மாணவரை பாராட்டி ரூபாய் ஐம்பதாயிரத்திற்கான காசோலையை கல்விக் குழுமத்தின் தலைவர் எஸ்.சுந்தர் வழங்கினார்.
அப்போது கல்விக் குழுமத்தின் இயக்குனர்கள் எஸ்.பத்மா, எஸ். ராஜசேகர், தாளாளர் தெய்வசிகாமணி, முதல்வர் கோபகுமார் ஆகியோர் மாணவரை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.