உள்ளூர் செய்திகள்
நாயுடு மங்கலத்தில் வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி பேசியபோது எடுத்த படம்.

அக்னி கலசத்தை வைக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம்

Published On 2022-01-31 14:47 IST   |   Update On 2022-01-31 14:47:00 IST
நாயுடு மங்கலத்தில் அகற்றப்பட்ட அக்னி கலசத்தை ஒருவாரத்தில் வைக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் நாயுடு மங்கலம் பஸ்நிலையம் பகுதியில் கடந்த 1989-&ம் ஆண்டு முதல் வைக்கப்பட்டு இருந்த அக்னி கவசம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானது.

இதுபற்றி அறிந்த வன்னியர் சங்கம் நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் பா.ம.க.மாவட்ட செயலாளர் பக்தவத்சலம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி நாயுடு மங்கலம் வந்து பார்வையிட்டார். 

அப்போது அவர் கூறியதாவது:-

நாயுடு மங்கலத்தில் இரவோடு இரவாக அகற்றப்பட்ட  அக்னி கலசத்தை ஒரு வாரத்தில் வைக்கவேண்டும். இதற்கு உடந்தையாக செயல்பட்ட 2 அலுவலர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்.

இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Similar News