உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை கிரிவல பாதையில் மரச்சிற்பங்கள் கரையான்கள் பிடியில் சிக்கி சேதமாகி இருப்பதை படத்தில் காணலாம்.

கரையானுக்கு இரையாகி வரும் கலைநயமிக்க மரச்சிற்பங்கள்

Published On 2022-01-31 14:40 IST   |   Update On 2022-01-31 14:40:00 IST
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கலைநயமிக்க மரச்சிற்பங்கள் கரையானுக்கு இரையாகி வருகிறது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பட்டுப்போன மரங்களை அகற்றும் போது அதன் நினைவாக அழகிய மர சிற்பங்கள் அமைக்கப் பட்டன. பல லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட இந்த மரச்சிற்பங்களை தமிழக நெடுஞ்சாலைத்துறை பராமரித்து வந்தது. 

இந்த நிலையில் இந்த மரச்சிற்பங்கள் கவனிக்கப்படாத நிலையில் தற்போது கரையானுக்கு இரையாகி பரிதாபமாக காட்சி அளிக்கின்றன. கிரிவலப்பாதையில் வலம் வரும் பக்தர்கள் இந்த மர சிற்பங்கள் மிகவும் ரசித்து வந்தனர். அதன் முன்பு போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். 

இந்த நிலையில்  சில மரச்சிற்பங்கள் உருக்குலைந்து போய் இருப்பது பக்தர்களை வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது.எனவே மரச்சிற்பங்களை பாதுகாக்க தேவையான ரசாயன கலவைகளை பூச வேண்டும் என்று பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

எனவே நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் கிரிவலப்பாதையில் உள்ள சிற்பங்களை பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா? என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

Similar News