உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

கோட்டப்பாளையம் மின்அலுவலகம் இடமாற்றம்

Published On 2022-01-31 11:48 IST   |   Update On 2022-01-31 11:48:00 IST
உப்பிலியபுரம் அருகே உள்ள கோட்டப்பாளையம் மின் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி:

திருச்சி மாவட்டம் துறையூர் கோட்ட மின்செயற்பொறியாளர் ஆனந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கோட்டப்பாளையத்தில் இயங்கி வரும் துறையூர் கோட்டம் உப்பிலியபுரம் உட்கோட்ட மின்சார அலுவலகம் இடமாற்றம் செய்யப்படுகிறது.

இது நாள் வரை வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த கோட்டப்பாளையம் மின்சார வாரிய அலுவலகம், நாளை முதல் (1 -&ந் தேதி) பாலகிருஷ்ணம்பட்டியில் இயங்கி வரும் துணை மின்நிலைய வளாகத்திலுள்ள சொந்த கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.

இனி வரும் காலங்களில், கோட்டப்பாளையம் உட்கோட்ட மின் பயனாளிகள், பொதுமக்கள், மின்வாரியம் சம்பந்தமான பணிகளுக்கு பாலகிருஷ்ணம்பட்டி, துணை மின்நிலைய வளாகத்தில் இயங்க இருக்கும் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News