உள்ளூர் செய்திகள்
அரியலூரில் தீண்டாமை உறுதி மொழி ஏற்பு
அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் தியாகிகளின் நினைவை போற்றும் வகையில் தீண்டாமை உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீண்டாமை ஒழிக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.
இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று நாட்டின் விடுதலைக்காக போராடி தங்களது இன்னுரியை நீத்த சுதந்திரப்போராட்டத் தியாகிகளின் தன்னிகரில்லா தியாகத்தை போற்றிடும் வகையில் உயிர்நீத்த தியாகிகளுக்கு 30.01.2022 அன்று மவுன அஞ்சலி செலுத்த அரசு உத்தரவிட்டு இருந்தது.
அன்று விடுமுறை தினம் என்பதால், நேற்றைய தினம் தியாகிகளுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தீண்டாமை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி உறுதிமொழியினை வாசித்தார்.
இதனை மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.