உள்ளூர் செய்திகள்
சப்-இன்ஸ்பெக்டரை கல்லால் தாக்கிய வாலிபர் கைது
வெம்பாக்கம் அருகே சப்-இன்ஸ்பெக்டரை கல்லால் தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் பகுதியில் பிரம்மதேசம் போலீஸ் நிலையம் உள்ளது. இதில் சப்-இன்ஸ்பெக்டராக விஜயகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரும் அய்யப்பன் என்ற போலீசாரும் ரோந்து பணிக்காக தென்னம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவிற்கு சென்றனர்.
மாலை 6 மணி அளவில் வீர விநாயகர் கோவில் அருகில் சிலர் கும்பலாக நின்றிருந்தவர்களை விஜயகுமார் கொரோனா காலமென்பதால் கூட்டமாக நிற்க கூடாது கலைந்து செல்லுங்கள் என்று கூறினார்.
அப்போது அந்த கும்பலில் இருந்த வினோத் குமார் (வயது 22) என்ற வாலிபர் சப்&இன்ஸ்பெக்டர் விஜயகுமாரை ஆபாச மாக பேசி கருங்கல்லால் பின்பக்க தலையில் தாக்கினார்.
இதில் படுகாயம் அடைந்த விஜயகுமாரை மற்றொரு போலீசார் மீட்டு நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக வெம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.