உள்ளூர் செய்திகள்
கீழ்பள்ளிப்பட்டில் நடந்த மாடு விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்.

மாடு விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்

Published On 2022-01-30 13:57 IST   |   Update On 2022-01-30 13:57:00 IST
கீழ்பள்ளிப்பட்டு கிராமத்தில் நடந்த மாடு விடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது.
கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கீழ்பள்ளிப்பட்டு கிராமத்தில் 32-ம் ஆண்டாக காளைவிடும் விழா நடைபெற்றது. 

விழாவில் பல்வேறு ஊர்களிலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீறிபாய்ந்து ஓடியது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை காளைகள் முட்டியதில் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. 

அவர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகளை ஊராட்சி மன்ற தலைவர் விஜயபாஸ்கர், ஒன்றிய கவுன்சிலர் எழிலரசிஅருள், துணை தலைவர் கௌதமி, முன்னாள் துணை தலைவர் முருகேசன், பெரியதனம் மாசிலாமணி, சண்முகம் மற்றும் விழாக்குழுவினர் வழங்கினர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை வேலூர் கூடுதல் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான், கூடுதல் துணை சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி இன்ஸ்பெக்டர்கள் நிலவழகன் (வேலூர் தாலுகா) முத்துக்குமார் (வேலூர் வடக்கு) உள்பட 70க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Similar News