உள்ளூர் செய்திகள்
மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவிக்கு ரூ.1.50 லட்சம் உதவித்தொகை
மருத்துவ படிப்பில் சேர்ந்த பென்னாத்தூர் அரசு பள்ளி மாணவிக்கு ரூ.1.50 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டது
வேலூர்:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பென்னாத்தூர் அருகே உள்ள கணேசபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் இவரது மனைவி வித்யா. இருவரும் கல்குவாரி தொழிலாளிகள்.
இவர்களின் மகள் சத்யா, மாற்றுத்திறனாளியான இவர் பென்னாத்தூர். அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்தார். இவர் நீட் தேர்வில் தகுதி பெற்றார்.
இதையடுத்து, மருத்துவ படிப்பில் சேருவதற்கான சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்று, தமிழக அரசின் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின்கீழ் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிப்பதற்கான ஆணையை பெற்றார்.
இந்நிலையில், மாணவியின் குடும்ப ஏழ்மையை அறிந்ததும், நந்தகுமார் எம்.எல்.ஏ, மாவட்ட தி.மு.க. அலுவலகத்துக்கு மாணவி சத்யா மற்றும் அவருடைய பெற்றோரை வரவழைத்தார்.
தன் சொந்த பணம் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை, மருத்துவ படிப்பு செலவுக்காக, மாணவி சத்யாவிடம் வழங்கினார்.