உள்ளூர் செய்திகள்
.

விடுமுறை என்பதால் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் உற்சாக பயணம்

Published On 2022-01-30 07:52 GMT   |   Update On 2022-01-30 07:52 GMT
விடுமுறை என்பதால் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள், உற்சாகமாக பரிசலில் பயணம் செய்தனர்.
ஒகேனக்கல்:

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பிரசித்திபெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி  கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று உற்சாக பயணம் செய்தனர். அவர்கள் தங்களது 

குடும்பத்தினருடன் பரிசலில் சென்று ஆனந்தமாக பொழுதை களித்தனர். மேலும் ஒகேனக்கல்லில் பொறித்த மீன், மீன் குழம்பு ஆகியவற்றை ருசித்து சாப்பிட்டனர். தற்போது தண்ணீர் வரத்து இல்லாததால் அருவிகளில் தண்ணீர் குறைந்துள்ளது. இதனால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் மட்டுமே குளித்தனர்.

இன்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்ததால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News