உள்ளூர் செய்திகள்
குடும்பத்தினரை மிரட்ட ஆற்றில் குதித்த வாலிபர்- மரக்கிளையில் சிக்கியதால் தப்பினார்
சத்தியமங்கலத்தில் குடும்பத்தினரை மிரட்ட ஆற்றில் குதித்த வாலிபர் மரக்கிளையில் சிக்கியதால் தப்பினார்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலத்தில் குடும்பத்தினரை மிரட்ட ஆற்றில் குதித்த வாலிபர் மரக்கிளையில் சிக்கியதால் தப்பினார்.
சத்தியமங்கலம் அடுத்த கெம்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (36). இவர் சத்தியமங்கலம் பவானி ஆற்று பாலம் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அவர் பாலத்தில் இருந்து திடீரென ஆற்றில் குதித்தார். இதில் அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மரக்கிளையில் சிக்கி தவித்து கொண்டு இருந்தார். அங்கு ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அவர்கள் சத்தியமங்கலம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 2 பேர் ஆற்றுப்பாலத்தில் குதித்து ஜெயராமனை உடனடியாக மீட்டு ஆற்றங்கரைக்கு கொண்டு வந்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மது போதையில் குடும்பத்தி னரை மிரட்டுவதற்காக ஆற்றில் குதித்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை மீட்டு ஆம்புலன்சு மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். ஆற்றில் குத்தித்து ஜெயராமனை மீட்ட 2 வாலிபர்களை அந்த பகுதி மக்கள் பாராட்டினர்.