உள்ளூர் செய்திகள்
வீட்டு மனை பட்டாகளுக்கான உரிய இடங்களை காட்டுமாறு பொதுமக்கள் மனு
குடியாத்தத்தில் வீட்டு மனை பட்டாகளுக்கான உரிய இடங்களை காட்டுமாறு தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் டவுன் பிச்சனூர் ஆர்.எஸ்.நகர், முனிசிபல் லைன், ஆசிரியர்காலனி ராமலிங்கம் நகர் ஆகிய பகுதியில் வசித்து வந்த பட்டியல் இன ஏழை எளிய மக்கள் வீட்டுமனை வழங்கக்கோரி குடியாத்தம் ஆதிதிராவிட நலத்துறை தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தகுதியான நபர்கள் 232 பேருக்கு குடியாத்தம் தாலுகா கொண்ட சமுத்திரம் ஊராட்சி காந்திநகர் கல்லேரி பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வீட்டுமனை பட்டா பெற்ற பெரும்பாலோனோர் ஏழைக் கூலித் தொழிலாளிகள் அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பகுதியில் குடிசைகள் அமைக்கலாம் என சில தினங்களுக்கு முன்பு அவர்களுக்கு வழங்கப்பட்ட இடத்திற்குச் சென்று பார்த்தபோது சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டு இருந்துள்ளதாகவும் நில உரிமையாளர் இங்கே ஏதும் வீட்டுமனை பட்டா வழங்க வில்லை என கூறியுள்ளதாக கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டுமனை பெற்ற 232 பட்டியல் இன ஏழை எளிய தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து புரட்சி பாரதம் கட்சியின் வேலூர் மாவட்ட செயலாளர் பி.மேகநாதன், ஒன்றிய குழு உறுப்பினர் குட்டிவெங்கடேசன் உள்ளிட்டோர் வீட்டு மனை பட்டா பெற்ற பொதுமக்களுடன் நேற்று குடியாத்தம் தாலுகா அலுவலகம் வந்து குடியாத்தம் தாசில்தார் லலிதாவிடம் நான்காண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவை அளந்து பயனாளிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் எனவும் அந்த இடத்தை வேறு நபர் உரிமை கொண்டாடுவதாகவும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட தாசில்தார் லலிதா இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் மூலம் விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.