உள்ளூர் செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள்.

பதவி உயர்வு வேண்டி தொடக்க பள்ளி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

Update: 2022-01-28 09:46 GMT
பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை:

தமிழக அரசு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க மறுத்து வந்தது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட பணப்பயன்கள் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டாரத்தில் ஆசிரியர் மோகன் மற்றும் வந்தவாசி பகுதியில் ஆசிரியர் சத்தியபாமா ஆகியோர் மீதான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு ஆணை வழங்க வலியுறுத்தி திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்று மாலை திருவண்ணாமலை மாவட்ட ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கியது. 

இதில் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆசிரியைகளும் பங்கேற்றனர்.

இந்த போராட்டம் குறித்து மாவட்ட செயலாளர் அந்தோணி ராஜ் கூறும்போது, ஆசிரியர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட 2ஆசிரியர்களுக்கு‌பதவி உயர்வு வழங்க வேண்டும்.அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.

இந்த போராட்டம் இன்று 2-வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.
Tags:    

Similar News