உள்ளூர் செய்திகள்
ஒழுங்குமுறை விற்பனைக்கூட சுமை தூக்கும் தொழிலாளர்கள் நுழைவாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்திய போது எடுத்த படம்.

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் திடீர் தர்ணா

Published On 2022-01-28 15:13 IST   |   Update On 2022-01-28 15:13:00 IST
சேத்துப்பட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களின் திடீர் தர்ணாவால் நெல் மூட்டைகளை எடைபோட முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்னர்.
சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம்பேட்டைவந்தவாசி சாலையில் சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.

இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடம் தமிழ்நாட்டில் 2-வது இடமும் திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலிடம் வகித்து வருகிறது. 

இங்கு சேத்துப்பட்டு சுற்றி அண்டை மாவட்டங்கள் பக்கத்து கிராமங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் மணிலா பயிர் வகைகளை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த திங்கட்கிழமை அன்று விவசாயிகள் கொண்டுவந்த நெல் மூட்டைகளை எடை போட்ப்பட்டு நிறுத்தப்பட்டது.

மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடம் சுமைதூக்கும்கூலி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு கோணிப்பை மாற்றி லோடு ஏற்றும் தொழிலாளர்கள் சுமார் 80க்கும் மேற்பட்ட சுமை தூக்கும்கூலி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 

இதனால் செவ்வாய்க்கிழமை புதன்கிழமை மற்றும் நேற்று வியாழக்கிழமை விவசாயிகள் கொண்டு வந்த சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்கியது.     
 
இதனால் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வர முடியாமல் பாதிப்பு ஏற்பட்டது. 

இதுகுறித்து கூலி தொழிலாளர்களிடம் சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தினேஷ் கடந்த 2 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தினார். 

ஆனால் எந்த ஒரு சுமூக முடிவும் எட்டப்படவில்லை இதனால் விவசாயிகள் பாதிப்பு அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து திருவண்ணாமலை மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடசெயலாளர் தர்மராஜ் சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வந்தார்.

பின்னர் சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூட நெல் மணிலா வியாபாரிகள் சங்க தலைவர் தண்டபாணிமற்றும் வியாபாரிகள் அனைத்து வணிகர் சங்க செயலாளர் ஜி.கிருஷ்ணமூர்த்தி பா.ம.க.வை சேர்ந்த அனாதிமங்கலம் பழனி மற்றும் சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வரதராஜ் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கூலி தொழிலாளி சங்க நிர்வாகிகள் பொறுப்பாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதில் வழக்கமாக பை மாற்ற கூலி ரூ.8 ஆகவும் லாரியில் லோடு ஏற்ற ரூ.8 ஆகவும் லாரி லோடு ஏற்ற மாமுல் ரூ.3 ஆகவும் இருந்து வந்தது.

பேச்சுவார்த்தை நடத்தியதில் பை மாற்ற ரூ.9 லாரி லோடு ஏற்ற ரூ.9 லாரியில் லோடு மாமுல் 3. ரூபாய் 50 காசு உயர்த்தி வழங்க சுமைதூக்கும் கூலி தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர். இதை அடுத்துஒழுங்குமுறை விற்பனைக்கூட நெல் மணிலா வியாபாரிகள் முன்வந்தனர். 

பின்னர் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது கூலி உயர்வும் கிடைத்ததால் கூலி தொழிலாளர்கள் மகிழ்ச்சியாக வேலைக்கு திரும்பி சென்றனர். 

பேச்சுவார்த்தைக்கு முன்பு சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூட நுழைவாயிலில் கூலித் தொழிலாளர்கள் தரையில் அமர்ந்ததால் சிறிது நேரம் அந்த பகுதி பரபரப்பு காணப்பட்டது.

Similar News