உள்ளூர் செய்திகள்
ஆரணியில் இன்று வேட்பு மனு தொடங்கியதால் நகராட்சி அலுவலக வளாகத்தில் போலீசார் குவிக்கபட்டுள்ள காட்சி.

ஆரணி நகராட்சி அலுவலகத்தில் போலீசார் குவிப்பு

Published On 2022-01-28 15:08 IST   |   Update On 2022-01-28 15:08:00 IST
உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியதையடுத்து ஆரணி நகராட்சி அலுவலகத்தின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆரணி:

நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி உள்ளிட்டவைகளுக்கு தேர்தல் வருகின்ற பிப்.19-ந்தேதி நடைபெறுகிறது. இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் 28 ஆயிரத்து 324 பெண் வாக்காளர் 25 ஆயிரத்து 740 ஆண் வாக்களர்களும் 3&ம் பாலித்தனர் 7 பேரும் என மொத்தம் 54 ஆயிரத்து 71 பேர் வாக்களிக்க உள்ளனர். ஆரணி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. 

இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியதால் நகராட்சி அலுவலக வளாகத்தில் ஆரணி டவுன் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் தலைமையில் போலீசார் குவிக்கபட்டுள்ளனர். 

இன்று முதல் தேர்தல் திருவிழா தொடங்கியதால் கட்சியினர்கள் உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.

Similar News