உள்ளூர் செய்திகள்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்.

மாற்றுத்திறனாளிகள் ஸ்மார்ட் செல்போன் பெற விண்ணப்பிக்கலாம்-திருவாரூர் கலெக்டர்

Published On 2022-01-28 14:53 IST   |   Update On 2022-01-28 14:53:00 IST
மாற்றுத்திறனாளிகள் ஸ்மார்ட் செல்போன் பெற விண்ணப்பிக்கலாம்- என்று திருவாரூர் கலெக்டர் கூறினார்.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட காதுகேளாத, வாய் பேசாத மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தக்க செயலியுடன் கூடிய செல்போன்கள் பெற விண்ணப்பிக்கலாம்.

மேற்காணும் செல்போன்களை கல்லூரிபயில்பவர்கள், சுயதொழில்புரிபவர்கள் மற்றும் பணிபுரிபவர்கள் மட்டுமே பெறதகுதியானவர்கள்.

ஆகவே, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தகாது கேளாத, வாய் பேசாத மற்றும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவசான்றிதழ் நகல், ஆதார் அட்டைநகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்-1, கல்வி பயிலும், பணிபுரியும், சுய தொழில் புரிவதற்கான சான்று ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அறை எண் 6, மாவட்டஆட்சியர் அலுவலகம், திருவாரூர் என்ற முகவரியில் 15.2.22-க்குள் விண்ணப்பிக்குமாறு திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News