உள்ளூர் செய்திகள்
உண்டியல் திருடுபோன இளங்காளியம்மன் கோவில்

கோவில் உண்டியல் உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு

Published On 2022-01-28 04:56 GMT   |   Update On 2022-01-28 04:56 GMT
கோவில் உண்டியல் உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு சம்பவத்தில் மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
அரியலூர் :

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கூத்தங்குடி கிராமத்தில் உள்ள பொன்னாற்றில் தண்ணீரில் குடம் ஒன்று மிதந்துவந்துள்ளது. அதனை பொதுமக்கள் கைப்பற்றி பார்த்த போது, கூத்தங்குடி கிராமத்தில் உள்ள இளங்காளியம்மன் கோவில் உண்டியல் என்பது தெரியவந்தது. 

இதனையடுத்து ஊர் நாட்டார்கள் மற்றும் பொதுமக்கள் கோவிலுக்கு சென்று பார்த்த போது கோவில் கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று வந்த நிலையில் கோவில் உண்டியல் வசூல் செய்யப்பட்டது. மேலும் தனிநபர்கள் வழங்கிய அதிகபட்ச தொகையான ரூ.10 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை பல்வேறு தொகைகள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

அந்நிலையில் 50 ஆயிரம் தொகையை உண்டியலில் இருந்ததாகவும், 3 உண்டியல்களை உடைத்து மர்பநபர்கள் பணத்தை எடுத்துக் கொண்டு உண்டியலை ஆற்றில் வீசியுள்ளனர்.

இந்த கிராமத்தில் இது வரை திருட்டு சம்பவங்கள் நடைபெறாத நிலையில் தற்போது கோவில் உண்டியல் உடைத்து பணம் திருடியிருப்பது, இப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News