உள்ளூர் செய்திகள்
மாடு விடும் விழாவில் சீறிபாய்ந்த காளைகள்.

மாடு விடும் விழாவில் காளைகள் முட்டி 20 பேர் காயம்

Published On 2022-01-27 09:43 GMT   |   Update On 2022-01-27 09:43 GMT
கீழ்வல்லம் கிராமத்தில் நடந்த மாடு விடும் விழாவில் காளைகள் முட்டியதில் 20 பேர் காயம் அடைந்தனர்.
கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வல்லம் கிராமத்தில் நேற்று 50-ம் ஆண்டாக காளைவிடும் திருவிழா நடைபெற்றது.

ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். விழாவில் பல்வேறு ஊர்களிலிருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு வீதியில் வேகமாக ஓடவிடப்பட்டது. 

இதில் வேகமாக ஓடி முதலிடம் பெற்ற லத்தேரி பாபு என்பவரின் காளைக்கு ரொக்கப் பரிசு ரூ.75,001, 2-ம் இடம் பெற்ற கிருஷ்ணகிரி காளைக்கு ரூ.60,001-ம், 3-ம் இடம் பெற்ற விருதம்பட்டு வீரமுத்தரையர் காளைக்கு ரூ.50,001 உள்பட 41 காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. 

பரிசுகளை ஊராட்சி தலைவர் சிவக்குமார், ஒன்றிய கவுன்சிலர் எழிலரசிஅருள், மாவட்ட கவுன்சிலர் தேவி மற்றும் விழாக்குழுவினர் வழங்கினர்.

காளைவிடும் திருவிழாவை வேடிக்கை பார்க்க வந்த வசந்தபுரம் மணிகண்டன், கீழ்வல்லம் ஜெயசீலன், கம்மசமுத்திரம் கவியரசன் உள்பட 20& க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

விழாவில் வேலூர் கோட்டாச்சியர் பிரியதர்ஷினி, தாசில்தார் செந்தில், வருவாய் ஆய்வாளர் சந்தியா மற்றும் வருவாய்த்துறையினர் மேற்பார்வையில், வேலூர் தாலுகா இன்ஸ்பெக்டர் நிலவழகன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா உள்பட 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News