உள்ளூர் செய்திகள்
செய்யாரை புதிய மாவட்டமாக அறிவிக்ககோரி பைக் பேரணி
செய்யாறு தலைமையில் புதிய மாவட்டம் அறிவிக்ககோரி பைக் பேரணி நடத்தினர்.
செய்யாறு:
செய்யாறை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் கே.கே.எஸ்.ராமச்சந்திரன் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவும் இதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்க செய்யாறு எம்.எல்.ஏ. ஓ.ஜோதிடம் மனு அளிக்க செய்யாறில் பைக் பேரணி நடைபெற்றது.
செய்யாறு மக்கள் முன்னேற்ற சங்க ஒருங்கிணைப்பாளர் நடராசன் தலைமையில் செய்யாறு வழக்கறிஞர்கள் சங்கம், செய்யாறு அனைத்து வியாபாரிகள் சங்கம், சமூக ஆர்வலர்கள், விவசாய சங்கம் மற்றும் பொதுமக்கள் சுமார் 500 பேர் பைக்கில் பேரணியாக ஊர்வலமாக சென்று வேதபுரீஸ்வரர் கோவிலில் தொடங்கி காந்தி சாலை, ஆற்காடு சாலை வழியாக முக்கிய வீதிகளில் பேரணியாக வந்து செய்யாறு சட்ட மன்ற அலுவலகத்தில் எம்.எல்.ஏ. ஓ.ஜோதிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட எம்.எல்.ஏ. விரைவில் முதல் அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.